தமிழன்டா!. அந்த பயம் இருக்கனும்!. குகேஷுடன் மோதுவதில் விருப்பம் இல்லை!. உலகின் NO.1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் அறிவிப்பு!
Magnus Carlsen: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் உலக செஸ் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மேக்னஸ் கார்ல்சன், இனி குகேஷுடன் மோதுவதில் எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது. நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். வெற்றிக்குப் பிறகு குகேஷ் பேசுகையில், உலகின் சிறந்த வீரருக்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன் என்றார்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு, முன்னாள் உலக செஸ் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேகன்ஸ் கார்ல்சன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் இனி இந்த சர்க்கசின் ஒரு பகுதியாக இல்லை. குகேஷுடன் மோதுவதில் எனக்கு விருப்பம் இல்லை. குகேஷ் செய்தது நம்பமுடியாத சாதனையாகும் குகேஷ் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிறைய சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
குகேஷ் வெற்றிக்காக தெளிவாக போராடினார். விளையாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர் ஒரு சிறந்த வேலையைச் செய்தார் என நான் நினைக்கிறேன். லிரென் கடைசி வரை நம்பிக்கையோடு காணப்பட்டாலும் குகேஷ் அதிரடியாக வெற்றியை வசப்படுத்தினார். இந்த வெற்றி குகேசுக்கு நல்ல உத்வேகம் அளித்திருக்கும். தற்போது அவர் தரவரிசையில் 2-வது இடத்தை பிடிப்பார் என்று நினைக்கிறேன். அவர் வருங்காலத்தில் நம்பர் ஒன் இடத்தையும் கைப்பற்றுவார் என தெரிவித்தார்.
Readmore: மகிழ்ச்சி… ரேஷன் கடைகளில் 3 பிரிவாக பொங்கல் தொகுப்பு…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!