யாரும் வெளியே போகாதீங்க... தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்...!
தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு, கரூர், திருப்புத்தூர் போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.
வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் நேற்றைய தினத்தை விட இன்று வெப்பம் அதிகமாக இருக்கும்.. ஆனால் இதுபோன்ற வெப்ப நாட்களுக்கு பிறகு எப்போது ஒரு குட் நியூஸ் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.