For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதிய வீடுகளை கட்டிக் கொடுத்த தமிழக வெற்றிக் கழகம்..!! திறந்து வைத்த புஸ்ஸி ஆனந்த்..!! எங்கு தெரியுமா..?

General Secretary Bussi Anand inaugurated the new houses completed for two beneficiaries on behalf of Tamil Nadu Vetri Kazhagam today and handed them over to the beneficiaries.
01:58 PM Jul 25, 2024 IST | Chella
புதிய வீடுகளை கட்டிக் கொடுத்த தமிழக வெற்றிக் கழகம்     திறந்து வைத்த புஸ்ஸி ஆனந்த்     எங்கு தெரியுமா
Advertisement

தமிழ் சினிமாவில், வசூல் மன்னனாக இருக்கும் நடிகர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, தொடர்ந்து அரசியலில் அதிக ஆர்வம் கட்டி வந்தார். இந்நிலையில், திடீர் என தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு, அரசியலுக்கு வருவதையும் உறுதி செய்தார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் 'கோட்' திரைப்படம் மற்றும் அடுத்ததாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தை நடித்து முடித்த பின்னர், முழுமையாக திரையுலகை விட்டு விலகிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல சமீபத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இதில், மாணாக்கர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

இந்நிலையில் தான், பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகளை, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒப்படைத்தார். வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.

Read More : ”எதிர்காலத்தில் கடலில் எந்த உயிரினமுமே இருக்காது”..!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Advertisement