For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே!. மீண்டும் ஆட்டம் ஆரம்பம்!. அடுத்த 4 நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெப்பம் !

According to the Meteorological Department, the temperature will increase for the next 4 days till the 14th in Tamil Nadu.
06:10 AM Jun 11, 2024 IST | Kokila
தமிழகமே   மீண்டும் ஆட்டம் ஆரம்பம்   அடுத்த 4 நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெப்பம்
Advertisement

Heat: தமிழகத்தில்வரும் 14ம் தேதிவரை அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 14ம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் மற்றும் தென்மாவட்ட கடலோர பகுதிகளில், வரும் ஜூன் 12ம் தேதி வரை, மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வுக்கு வாய்ப்புள்ளது என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்கடல் என்பது, கடல் சீற்றம் எதுவும் இன்றி, திடீரென அதிக உயரத்தில் அலைகள் எழும்.

Readmore: 10, +2 முடித்தவரா?. BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை!. 1,526 காலியிடங்கள்!… ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

Tags :
Advertisement