முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிகிரி போதும்.. தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை இருக்கு..!! விண்ணப்பிக்க ரெடியா..?

Tamil Nadu Public Works Department (PWD) has released the recruitment notification for Graduate and Technician Apprentices for the year 2024-25.
11:01 AM Dec 24, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ்நாடு பொதுப்பணித் துறை (PWD) 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி மற்றும் டெக்னீசியன் பயிற்சியாளர்களுக்கான பணி நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

காலி பணியிடங்கள் : பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல்) 500 காலிப்பணியிடங்களும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் 160 காலிப்பணியிடங்களும், பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல் அல்லாத) 100 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

கல்வித் தகுதி : பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல்) பணிக்கு சிவில்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது பி.ஆர்க் பிரிவில் BE/B.Tech முடித்திருக்க வேண்டும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிக்கு கட்டிடக்கலை அல்லது சிவில்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல் அல்லாத) BA அல்லது B.Sc அல்லது B.Com அல்லது BBA அல்லது BCA அல்லது BBA அல்லது ஏதேனும் பொறியியல் அல்லாத பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது தகுதி : 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. பதவிகளை பொறுத்து சம்பளம் மாறுப்டம்.

தேர்வு முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் நவம்பர் 25, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை TN PWD அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பச் செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் உள்ளது. மேலும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more ; யாரு இந்த சாண்டா கிளாஸ்..? கிறிஸ்துமஸ் தாத்தா வந்த சுவாரஸ்ய வரலாறு இதோ..

Tags :
Tamil Nadu Public Works DepartmentTechnician Apprentices
Advertisement
Next Article