முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’தமிழ்நாடு சீரழிந்து கிடக்கிறது’..!! ’உங்கள நம்பிதான் நாடு இருக்கு’..!! விஜய்யை இழுத்துவிட்ட மன்சூர் அலிகான்..!!

07:26 AM Nov 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கேள்வி பதிலின்போது, 2026இல் கப்பு முக்கியம் பிகிலு என்று பிகில் பட வசனத்தை பேசி பதில் கூறினார். இது 2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கிறதா? என்று விவாதம் எழுந்துள்ளது.

Advertisement

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ. இப்படம் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் ரத்னகுமார், ”விஜயை இன்சல்ட் பண்ணி பேசியுள்ளார்கள். ஆனால், இன்று மாஸ் பண்ண வேண்டும் என்றால், அவர் வர வேண்டியது கூட தேவையில்லை. அவரின் புகைப்படம் வந்தாலே போதும். விஜயுடன் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது. விஜயிடம் கற்றுக்கொண்டது என்னவென்றால், அவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் ரொம்ப எளிமையாக பேசுவார். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பசிச்சா கீழ வந்துதானே ஆக வேண்டும்” என்று பேசினார்.

இதை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலி கான் பேசுகையில், ”நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சக்சஸ் சக்சஸ் (Success Success) என்ற வசனம் பேசிய இடத்தில் தான், நாளைய தீர்ப்பு படத்தின் பூஜை நடைபெற்றது. தமிழ்நாட்டின் நாளைய தீர்ப்புக்கு வாழ்த்துகள். நீங்கள் இன்னும் கடுமையாக உழைக்கனும். நாங்கள் துணை இருப்போம். தமிழ்நாடு சீரழிந்து கிடக்கிறது. தண்ணி அடிக்காம உழைக்க காத்திருங்க. உங்கள நம்பிதான் நாடு இருக்கு. நாளைய தீர்ப்பை எழுத தயாராகுங்கள்“ என்று பேசினார்.

Tags :
நடிகர் விஜய்மன்சூர் அலிகான்லியோலோகேஷ் கனகராஜ்வெற்றி விழா
Advertisement
Next Article