முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது" வஞ்சிக்கும் பாஜக அரசு..! முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!

06:53 PM Apr 27, 2024 IST | Kathir
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், தென் மாவட்டங்களையும் மழை பதம் பார்த்துவிட்டது. கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதற்கிடையே, மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்பட்டது.

Advertisement

இதனையடுத்து இன்று மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை வாரி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் பதிவில், "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article