For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

PM SHRI பள்ளிகளை தொடங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்..!! அண்ணாமலை ஹேப்பி..!!

11:57 AM Mar 16, 2024 IST | 1newsnationuser6
pm shri பள்ளிகளை தொடங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்     அண்ணாமலை ஹேப்பி
Advertisement

இந்தியா முழுவதும் PM SHRI பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்த கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று நேற்று மார்ச் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், ”மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ள, காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக இருக்கும். நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும், இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்” என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More : Seeman | 14 மருத்துவர்கள், 4 பேராசிரியர்கள்..!! வேட்பாளர்களை அதிரடியாக களமிறக்கும் நாம் தமிழர்..!!

Advertisement