For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சூப்பர் திட்டம்...! பெண் விவசாயிகளுக்கு ரூ.7,000 மானியம் வழங்கும் தமிழக அரசு..! முழு விவரம்

Tamil Nadu government to provide Rs. 7,000 subsidy to women farmers
01:48 PM Dec 01, 2024 IST | Vignesh
சூப்பர் திட்டம்     பெண் விவசாயிகளுக்கு  ரூ 7 000 மானியம் வழங்கும் தமிழக அரசு    முழு விவரம்
Advertisement

மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகளில் சிறு, குறு ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

Advertisement

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும் விவசாயிகள் காலத்தே சாகுப்படிப் பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தித் திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.

நடப்பு (2024-25 ஆம்) நிதி ஆண்டில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், தருமபுரி மாவட்டத்திற்கு, அலைபேசி வாயிலாக செயல்படுத்தும் (Mobile Phone operated Automatic Pumpset controller / Remote Motor operator for electric pumpset) ரூ.13.09/- இலட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே மேற்படி மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகளில் சிறு, குறு ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.7000/- மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.4000/- வழங்கப்படுகிறது.

எனவே மேற்படி மோட்டார்கள் வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் 1). உதவி செயற்பொறியாளர்(வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (தொலைப்பேசி: 04342 296132) மற்றும் 2). உதவி செயற்பொறியாளா(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு, அரூர், தருமபுரி (தொலைப்பேசி: 04346296077) அலுவலகங்களை தொடர்பு கொண்டு உரிய வழிமுறைகளின்படி மானியத்தில் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags :
Advertisement