For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் தமிழக அரசு...! எப்படி இதற்கு விண்ணப்பிப்பது...?

Tamil Nadu government to provide 50 percent subsidy for setting up poultry farms.
06:50 AM Dec 18, 2024 IST | Vignesh
கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் தமிழக அரசு     எப்படி இதற்கு விண்ணப்பிப்பது
Advertisement

கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

Advertisement

கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டு கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 3 முதல் 6 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிக்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1,56,875 மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50% பங்களிப்பு தொகை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதராங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை கட்ட மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்கும் வகையில் குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையும், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 30% ஒதுக்கீடும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) மூன்று வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழியுடன் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags :
Advertisement