For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கா..? அப்படினா ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Rs.50,000 for one girl child and Rs.25,000 each for two girls.
07:13 AM Aug 07, 2024 IST | Chella
உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கா    அப்படினா ரூ 50 ஆயிரம் கிடைக்கும்     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்கு ரூ.25,000 வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. இதற்கான முதிர்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு அரசால், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அனைத்து பெண் குழந்தைகளும் குறைந்தபட்ச கல்வித் தகுதியான 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெறும் வகையில், முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், இருவருக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். 18 வயது பூர்த்தியடைந்த பிறகு முதிர்வுத் தொகை மற்றும் வட்டித் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.

* இரண்டாவது குழந்தை பிறந்து 3 வருடங்களுக்குள் இருந்தால், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.

* குழந்தைகளின் தாயார் 35 வயதிற்குள் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

* இருப்பிடச் சான்று மற்றும் ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

* வருமானச் சான்று ரூ.72,000-க்குள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/மண்டல அலுவலகங்களில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க வேண்டும். அதேநேரம் இத்திட்டத்தில் விண்ணப்பித்து, வைப்புநிதிப் பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/மண்டல அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவு அலுவலர்/மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சமூக நலத்துறை முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளுக்கான வைப்புத் தொகையை அரசு செலுத்தும். குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் முதிர்வுத்தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில், தேனியில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, வைப்புத்தொகை ரசீது பெறப்பட்ட பயனாளிகளில், முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Read More : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! ஆகஸ்ட் இறுதிக்குள்..!! அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?

Tags :
Advertisement