முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீர தீரச் செயல்களுக்கு ரூ.1 லட்சம் + விருது...! விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு...!

Tamil Nadu government announces Rs. 1 lakh + award for heroic deeds...! You can apply
07:21 AM Nov 22, 2024 IST | Vignesh
Advertisement

வீர தீரச் செயல்களுக்கான -அண்ணா பதக்கம்- ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீரரைச் செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியானவர்கள்.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வீர தீரச் செயல்களுக்கான -அண்ணா பதக்கம்- ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது எனவும் வீரரைச் செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதி. பொதுமக்களில் முவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும்.

பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை எனவும் இங்கிருது ரூ.100,000 க்கான (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும் எனவும், இப்பதக்கம் முதலமைச்சர் அவர்களால் 28.01.2025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும். மேலும், 2025ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் - விருதுக்கு விதிகளின்படி தகுதியுடைய அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

https.//awards.tn.gov.in என்ற அக்கடித்தில், விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் மட்டுமே பெறப்படும் எனவும், அவ்விருதுக்காக பரித்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) படிவத்தில் தெளிவாகவும் தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
awardCMOmk stalinrepublic daytn government
Advertisement
Next Article