முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெங்களூரில் பேருந்துக்காக காத்திருந்த தமிழ்நாட்டு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

Tamil Nadu girl gang-raped while waiting for bus in Bengaluru..
01:01 PM Jan 23, 2025 IST | Mari Thangam
Advertisement

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்ணை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில், தமிழ் நாட்டை சேர்ந்த 37 வயது பெண் பெங்களூரு கேஆர் மார்க்கெட் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் பேருந்து இங்கே நிற்காது. அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் தான் நிற்கும் எனக் கூறி, அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது எஸ்ஜே பூங்காவில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நகைகள், ரொக்கம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரும் மார்க்கெட்டில் கூலி வேலை செய்பவர்கள் என தெரிய வந்துள்ளது. பகலில் மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் அவர்கள், இரவில் மார்க்கெட்டில் உள்ள காலி இடங்களில் படுத்து உறங்குவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று பெண் தனியாக நிற்பதை கண்ட அவர்கள், அந்த பெண்ணிற்கு உதவுவது போல் நடித்து அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கர்நாடக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Read more ; ஓட்டுநர் உரிமம் பெற யார் தகுதியானவர்..? எந்த வாகனத்திற்கு என்ன வகையான உரிமம்.. A முதல் Z வரையிலான விவரம் இதோ..

Tags :
#bengalururapeTamil Nadu
Advertisement
Next Article