For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

8 ஆம் வகுப்பு பாஸ் போதும்.. நல்ல சம்பளத்துடன் தமிழக அரசில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Tamil Nadu Social Welfare and Women's Rights Department has published a notification to fill the vacancies in the Integrated Service Center.
01:01 PM Nov 07, 2024 IST | Mari Thangam
8 ஆம் வகுப்பு பாஸ் போதும்   நல்ல சம்பளத்துடன் தமிழக அரசில் வேலை     ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த சேவை மையங்களை (one stop centre) நிறுவி இயக்கி வருகிறது. இதில் கோயம்புத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் அதிகார பூர்வ இணையதள பக்கம் சென்று தங்கள் விண்ணப்பங்களை பதிவிடவும்

Advertisement

காலி பணியிடம் : வழக்கு பணியாளர்

என்னென்ன தகுதி :

* வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Master of social work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology படித்திருக்க வேண்டும்.

* 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.

* 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

* கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடம் : பாதுகாவலர்

என்னென்ன தகுதி :

* பாதுகாவலர் பணிக்கு, கல்வித்தகுதி 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.

* நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.

* 24 மணிநேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

* உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

* இதற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; ஒரு கிலோ வெங்காயம் விலை இவ்வளவா? கிடு கிடுவென உயரும் காய்கறி விலை.. எப்போது குறையும்.?

Tags :
Advertisement