Job Alert : டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! - உடனே விண்ணப்பிங்க
சிறப்பு போட்டித் தேர்வுக்கான தற்காலிக தட்டச்சு பணிக்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்புப் போட்டித் தேர்விற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயது : 01.07.2024 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
1. குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2. தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் அலுவலக ஆட்டோமேஷன் குறித்த சான்றிதழ் பாடநெறியில், கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : சிறப்புப் போட்டித் தேர்வு ஒருகட்டத் தேர்வாக நடத்தப்படும். நபர்களை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இறுதி தரவரிசையினை தீர்மானிக்கும். தேர்வர் எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதித் தேர்வு மேற்கொள்ளப்படும்.
தேர்வு நேரம் : 8.2.2025 (9:30 to 12:30 pm)
காலிப்பணியிடங்கள் : 50
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடங்கிய நாள் 25.11.2024, விண்ணப்பித்தினை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 24.12.2024 ஆகும். எனவே தகுதி உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.