முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

CM Stalin | மரண பிடியில் பல உயிர்களை காத்த ஓட்டுநர்.. ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கிய ஸ்டாலின்!!

Tamil Nadu Chief Minister Mukherjee Stalin has announced 5 lakhs to the family of Malayappan, a private school bus driver who took his own life after saving school children.
09:05 AM Jul 26, 2024 IST | Mari Thangam
Advertisement

பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய பின்னர் தன் உயிரை நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் மலையப்பன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 5 லட்சம் என அறிவித்துள்ளார். 

Advertisement

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கேபிசி நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (49). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். அதே வேனில் இவரது மனைவி லலிதா, குழந்தைகளின் உதவியாளராக உள்ளார். நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு சேமலையப்பன், வேனில் 20 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

அப்போது, திடீரென சேமலையப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியையும் பொருட்படுத்தாமல் வேனை சாலையின் ஓரமாக நிறுத்தினார். உடனே மனைவி லலிதா தண்ணீர் கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த சேமலையப்பன் மயங்கி சாய்ந்தார். உடனடியாக தனியார் ஆம்புலன்சில் சேமலையப்பனை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ஓட்டுனர் மலையப்பன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

Read more ; உஷார்!. லிஃப்ட்டுக்குள் பேட்டரியை எடுத்து சென்ற நபர்!. வெடித்து சிதறியதால் பறிபோன உயிர்!

Tags :
cm stalindriver deathtirupurtn government
Advertisement
Next Article