For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கே கொடுந்துயரத்திற்கு காரணம்’..!! இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்..!!

Director Ba.Ranjith has condemned the negligence of the Tamil Nadu government and the police in the Kallakurichi issue.
01:04 PM Jun 20, 2024 IST | Chella
’தமிழக அரசு  காவல்துறையின் அலட்சியப் போக்கே கொடுந்துயரத்திற்கு காரணம்’     இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்
Advertisement

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப்போக்கே இந்த கொடுந்துயரத்திற்கு காரணம் என இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ”கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இந்த கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

இதனால் அவர்களின் குடும்பங்களும், வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம். பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், காவல் நிலையத்தின் அருகில் இப்பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமான காவல்துறையினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசை #நீலம்பண்பாட்டுமையம் வலியுறுத்துகின்றது” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : ’முதல்வரே’..!! ’உடனே ராஜினாமா செய்யுங்கள்’..!! ’உயிரிழப்புக்கு காரணமே இதுதான்’..!! சீறிய எடப்பாடி பழனிசாமி..!!

Tags :
Advertisement