For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..

Tamiḻaka pakutikaḷiṉ mēl nilavum vaḻimaṇṭala kīḻaṭukku cuḻaṟci kāraṇamāka aṭutta 3 maṇi nērattil 11 māvaṭṭaṅkaḷil lēcāṉatu mutal mitamāṉa maḻaikku vāyppu uḷḷatāka ceṉṉai vāṉilai āyvu maiyam terivittuḷḷatu. Chennai Meteorological Department has said that there is a possibility of light to moderate rain in 11 districts in the next 3 hours due to the low circulation prevailing over Tamil Nadu.
06:02 PM Jun 25, 2024 IST | Mari Thangam
அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை   வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்
Advertisement

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; அரசமைப்புப் புத்தகத்தை கையிலேந்தி MP-ஆக பதவியேற்ற ராகுல் காந்தி!! ஆரம்பமே அமர்களப்படுத்திய தமிழக MPக்கள்…!

Tags :
Advertisement