நடிகை தமன்னாவின் காதலன் விஜய் வர்மா அரிய வகை நோயால் பாதிப்பு.. ரசிகர்கள் ஷாக்..!!
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. ஒரு காலத்தில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது. தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும், ஹிந்தியிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா.
சில வருடங்களுக்கு முன்பு தான் நடித்த ஒரு திரைப்படத்தில் தன்னோடு இணைந்து நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் தமன்னாவிற்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வரும் நிலையில், தமன்னா - விஜய் வர்மா திருமணம் எப்போது என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமன்னாவின் காதலன் விஜய் வர்மா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளார்.
சமீபத்தில் வெப் சீரிஸ் ப்ரோமோஷனின் கலந்து கொண்டு பேசிய விஜய் வர்மா, தான் விட்டிலிகோ என்ற சரும பிரச்சனையால் அவதிப்படுவதாக கூறினார். இது தெலுங்கில் பொல்லி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு தொற்று நோய் அல்ல. இதனால் முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படும் என்றும், அவற்றை மறைக்க மேக்கப் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முதலில் இந்த நோய் குறித்து பயந்தேன்.. படங்களில் பிஸியான பிறகு, இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டேன் என்று விஜய் வர்மா கூறினார். நானி ஹீரோவாக நடித்த எம்.சி.ஏ படத்தில் வில்லனாக நடித்து கவர்ந்த விஜய் வர்மா, தற்போது பாலிவுட்டில் வரிசையாக நடித்து வருகிறார். மிர்சாபூர் வெப் சீரிஸ், கல்லி பாய்ஸ், டார்லிங் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.