ஜெயிலர் படத்திற்கு பின் தனது சம்பளத்தை 30% உயர்த்திய தமன்னா..!
ஜெயிலர் படத்திற்கு பின் தமன்னா தனது சம்பளத்தை 30% உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை தமன்னா. நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. அயன், பையா, சுறா, ஸ்கெட்ச், வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழில் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் உலகளவில் ட்ரெண்ட் ஆனார்.
சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் அரண்மனை படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. எனவே இந்த படம் பாக்ஸ் ஆபிசிலும் ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் அரண்மனை 4 படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்காக தமன்னாவுக்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அச்சச்சச்சோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றதுடன், குஷ்புவும், சிம்ரனும் ஆடிய பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஜெயிலர் படத்திற்கு அவர் ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. எனவே, 3 கோடியுடன் ஒப்பிடுகையில், தமன்னா தனது சம்பளத்தை 33.33% உயர்த்தி உள்ளார். ஆனால் அவரின் சம்பளம் 5 கோடியாக இருந்தால், அது 66.66% அதிகமாகும். எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.