காலையிலே... இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்...! ரிக்டர் அளவு 6.7 ஆக பதிவு...!
இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் அச்சே பகுதியிலுள்ள கடற்கரை நகரமான சினாபாங்-ன் கிழக்கு பகுதியில் 362 கி.மீ. (225 மைல்) தூரத்தில் கடலுக்கடியில் 10 கி.மீ. (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் 5.9 ரிக்டராக இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்துக்கு பிறகான பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியா தீவுக்கூட்டம், பசிபிக் படுக்கையில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட 5.6 அளவிலான நிலநடுக்கத்தால் மேற்கு ஜாவாவின் சியாஞ்சுர் நகரில் 331 பேர் உயிரிழந்தனர், 600 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.