செல்பி எடுக்க தடை விதித்த நாடு.. மீறினால் 6 மாதம் சிறை.! ஏன் தெரியுமா.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரது கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. எனவே செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஒருவரின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் செல்பிகளின் மூலமாக அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதை குறித்து அறிய முடியும்.
விளையாட்டாக செல்ஃபி எடுப்பதில் ஆரம்பித்து, உயிரை பணயம் வைத்து செல்பி எடுக்கும் அளவிற்கு செல்பி மோகம் மக்களின் மத்தியில் பரவி வருகிறது. ஒரு சில நேரங்களில் சுற்றி இருப்பவர்களுக்கும், தன்னுடன் வந்தவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த செல்ஃபி பிரியர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற இடத்தில் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லாஸ்ட் வேகாஸ் என்ற பகுதி பிரபலமான சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. இங்கு அவ்வப்போது வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஆடம்பரமாக நிகழ்ச்சிகள் நடைபெறும். இதை காண்பதற்காகவே பார்வையாளர்கள் லாஸ்ட்வேகாஸிற்கு சென்று வருகிறார்கள்.
இங்குள்ள மக்கள் கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் காரணத்தினாலும், எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது என்பதற்காககவும் லாஸ்ட்வேகாஸ் பகுதியில் மக்கள் நிற்கவும், பாலங்களில் கூட்டமாக ஒரே இடத்தில் குவியவும், செல்பி எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செய்பவருக்கு 6 மாத காலத்திற்கு சிறை தண்டனை அல்லது 1000 அமெரிக்கா டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.