2024: புது வருடத்தில் உங்கள் வாழ்க்கை முறை மாற நீங்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி.!
2024 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே உள்ளன. இந்நிலையில் புது வருடத்திலிருந்து தொடங்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து நாம் இப்போதே முடிவு செய்திருப்போம். எனினும் ஒருவருக்கு ஆரோக்கியம் தான் அனைத்தையும் விட முக்கியமானது. எனவே வர இருக்கின்ற புதிய ஆண்டில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சில உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வோம்.
2024 ஆம் ஆண்டு உடல் நலனை பேணும் உறுதி மொழியில் முதலாவதாக உணவில் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடுவேன் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வாழவும் உதவும். வருகின்ற புத்தாண்டில் உடற்பயிற்சி கட்டாயம் செய்வேன் என்ற உறுதி மொழியை இரண்டாவதாக எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் இருக்கும் கொழுப்புகள் கரைவதோடு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் நீங்குகிறது. இதன் மூலம் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்
மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ மன ஆரோக்கியமும் அதே அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே கவனத்தைச் சிதறவிடாமல் மனதை ஒருமுகப்படுத்துவது தொடர்பான உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். மனதை ஒருமுகப்படுத்த கற்றுக் கொள்வதன் மூலம் கவனம் சிதறுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் நம்முடைய வேலைகளை எளிதாக முடிக்க முடிவதோடு புண்ணியமாகவும் செயல்பட உதவுகிறது. இதனால் தேவையற்ற மன அழுத்தங்களும் தடுக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு உடலை நீரேற்றுத்துடன் வைத்திருப்பதை அடுத்த உறுதி மொழியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நோய் தொற்று சரும பிரச்சனைகள் மற்றும் தலைமுடி உதிர்தல் போன்றவற்றிற்கு நீர்ச்சத்து குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி மொழியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஐந்தாவது ஆக ஒவ்வொரு நாளும் ஆறு முதல் எட்டு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்பதையும் உறுதி மொழியாக எடுத்துக் கொள்ளுங்கள். தூக்கமின்மை உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிற்கு காரணமாக அமைகிறது. மேலும் தூக்கமின்மை காரணமாக நம்முடைய வேலைகளை சரியாக செய்ய முடியாத நிலையில் ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய நாள் ஒன்றுக்கு ஆறு முதல் 8 மணி நேரங்கள் தூங்க வேண்டும் என்பதையும் உறுதி மொழியாக எடுத்துக் கொள்ளுங்கள்.