தைவானைச் சுற்றி வட்டமடிக்கும் சீன ராணுவம்..!! தைவான் எடுத்த நடவடிக்கை!!
தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி தனது 21 போர் விமானங்கள், 7 கடற்படை கப்பல்களை சீனா நிலை நிறுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அமெரிக்கா தைவானுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் தைவான் சீனாவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
நிலமை இவ்வாறு இருக்க, இன்று தைவான் தனது எல்லையை சுற்றி 22 சீன விமானங்கள் மற்றும் சீனக் கடற்படைக் கப்பல்களை கண்காணித்து உயர் ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ விமானம் மற்றும் மக்கள் விடுதலை ராணுவ கடற்படை கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தீவு நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தைவானை சுற்றி இயங்கும் 22 பி எல் ஏ விமானங்களும் 7 கப்பல்களும் இன்று காலை 6 மணிக்கு கண்டறியப்பட்டன, 17 விமானங்கள் இடைநிலை கோட்டை கடந்து தைவானின் வடக்கு, தென்மேற்குப் பகுதிக்குள் நுழைந்தன. நிலமையை நாங்கள் உண்ணிப்பாக கவணித்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.,
இதனால், தைவான் ஜலசந்தி முழுவதும் பதற்றம் அதிகரித்து வருகிறது. சீனா தனது ராணுவ பிரச்சாரத்தை அதிகரித்து, அப்பகுதியில் அடிக்கடி பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சூழல் தைவானுக்கு எதிராக பெய்ஜிங்கின் தற்போதைய அழுத்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் தைவான் மீது சீனா தனது உரிமைக்கோரலை வலியுறுத்துவதற்கும் தைவானின் இறையாண்மைக்கு சவால் விடும் முயற்சிகளாக பார்க்கப்படுகிறது.
Read more ; பிரச்சாரங்களுக்கு பெயர் பெற்ற உக்ரைன் முன்னாள் எம்.பி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை..!! யார் அவர்?