டி20 உலகக்கோப்பை!… எங்களுக்கு அநியாயம் நடக்கிறது!… ICC பாரபட்சம் காட்டுவதாக இலங்கை வீரர்கள் புகார்!
ICC: எங்களுக்கு மிகவும் அநியாயம் நடக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையை நியாயமற்றது என இலங்கை வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த நிலையில் இலங்கை வீரர்கள் போட்டி அட்டவணை தங்களை இறுக்கமாக்கியுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஐசிசியின் போட்டி அட்டவணைப் பட்டியல் நியாயமற்றது என்றும், நீண்ட பயண நேரம் காரணமாக ஏற்கனவே ஒரு பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் இலங்கை அணி வீரர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷணா கூறுகையில், ''எங்களுக்கு மிகவும் அநியாயம், நாங்கள் ஒவ்வொரு நாளும் (போட்டிக்கு பின்) வெளியேற வேண்டும். ஏனென்றால் நாங்கள் நான்கு வெவ்வேறு மைதானங்களில் விளையாடுகிறோம். புளோரிடாவில் இருந்தும், மியாமியில் இருந்தும் நாங்கள் சென்ற விமானம், அடுத்த விமானத்தை பெற நாங்கள் 8 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது'' என்றார்.