டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அசத்தியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இந்த தொடர் நடைபெற உள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன் எடுத்தார். இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷன்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து, 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நெதர்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில்,இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்யன் தத் 3 விக்கெட்டுகளையும், கைல் கெலின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் நெதர்லாந்து அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Read More ;‘இந்த நகரத்தில் வசித்தால் ரூ.8 லட்சம் நிதி தரும் அரசு!’ எங்குள்ளது தெரியுமா?