For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டி20 உலகக் கோப்பை 2024!… ஜூன் 1 முதல் 29 வரை..! முழு விவரம்..!

09:05 AM Jan 06, 2024 IST | 1newsnationuser3
டி20 உலகக் கோப்பை 2024 … ஜூன் 1 முதல் 29 வரை    முழு விவரம்
Advertisement

கடந்த 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்தநிலையில் 2024ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை டி20 தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது என்றும், அதற்கான அணிகளின் பட்டியலையும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பை தொடரை, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், நேபாள், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா உகாண்டா, கனடா என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் நடைபெறும். ஜூன் 26 மற்றும் 27-ம் தேதிகளில் முதல் மற்றும் 2வது அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும். கடைசியாக ஜூன் 29-ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி டல்லாஸில் நடக்கிறது.

குழு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும் நிலையில், சூப்பர் 8 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 5ம் தேதி நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம், இந்தியா டி20 உலகக் கோப்பை தொடருக்குள் காலடி எடுத்து வைக்கிறது. இதையடுத்து, ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் குரூப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா இடம் பெற்றுள்ள குழுவில், அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. அந்தவகையில், ஜூன் 5ம் தேதி இந்தியா vs அயர்லாந்து இடையேயான போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்தியா vs அமெரிக்கா ஜூன் 12ம் தேதியும், இந்தியா vs கனடா ஜூன் 15 ம் தேதியும் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இருக்கிறது. இந்தியா குரூப் போட்டிகளில் தேர்ச்சி பெரும் பட்சத்தில், அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேரும். அதாவது, குழு போட்டிகளில் தேர்ச்சி அடையும் பட்சத்தில், இந்தியா ஜூன் 20ம் தேதி பார்படாஸில் தனது முதல் சூப்பர் 8 போட்டியை விளையாடும்.

இந்தியா விளையாடும் அனைத்து சூப்பர் 8 போட்டிகளும் மேற்கிந்திய தீவுகளில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜூன் 29ஆம் தேதி டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி பார்படாஸில் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

2024 T20 உலகக் கோப்பைக்கான முழுப் போட்டிகள்:

  1. ஜூன் 1, 2024 - அமெரிக்கா vs கனடா, (டல்லாஸ்)
  2. ஜூன் 2, 2024 - வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா, (கயானா)
  3. ஜூன் 2, 2024 - நமீபியா vs ஓமன், (பார்படாஸ்)
  4. ஜூன் 3, 2024 - SL vs தென்னாப்பிரிக்கா, (நியூயார்க்)
  5. ஜூன் 3, 2024 - ஆப்கானிஸ்தான் vs உகாண்டா, (கயானா)
  6. ஜூன் 4, 2024 - இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து, (பார்படாஸ்)
  7. ஜூன் 4, 2024 - நெதர்லாந்து vs நேபால், (டல்லாஸ்)
  8. ஜூன் 5, 2024 - இந்தியா vs அயர்லாந்து, (நியூயார்க்)
  9. ஜூன் 5, 2024 - பப்புவா நியூ கினியா vs உகாண்டா, (கயானா)
  10. ஜூன் 5, 2024 - ஆஸ்திரேலியா vs ஓமன், (பார்படாஸ்)
  11. ஜூன் 6, 2024 - அமெரிக்கா vs பாகிஸ்தான், (டல்லாஸ்)
  12. ஜூன் 6, 2024 - நமீபியா vs ஸ்காட்லாந்து, (பார்படாஸ்)
  13. ஜூன் 7, 2024 - கனடா vs ஐயர்லாந்து, (நியூயார்க்)
  14. ஜூன் 7, 2024 - நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான், (கயானா)
  15. ஜூன் 7, 2024 - இலங்கை vs பங்களாதேஷ், (டல்லாஸ்)
  16. ஜூன் 8, 2024 - நெதர்லாந்து vs தென்னாப்பிரிக்கா, (நியூயார்க்)
  17. ஜூன் 8, 2024 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, (பார்படாஸ்)
  18. ஜூன் 8, 2024 - வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா, (கயானா)
  19. ஜூன் 9, 2024 - இந்தியா vs பாகிஸ்தான், (நியூயார்க்)
  20. ஜூன் 9, 2024 - ஓமன் vs ஸ்காட்லாந்து, (ஆன்டிகுவா)
  21. ஜூன் 10, 2024 - தென்னாப்பிரிக்கா vs வங்காளதேசம், (நியூயார்க்)
  22. ஜூன் 11, 2024 - பாகிஸ்தான் vs கனடா, (நியூயார்க்)
  23. ஜூன் 11, 2024 - இலங்கை vs நேபாளம், (புளோரிடா)
  24. ஜூன் 11, 2024 - ஆஸ்திரேலியா vs நமீபியா, (ஆன்டிகுவா)
  25. ஜூன் 12, 2024 - அமெரிக்கா vs இந்தியா, (நியூயார்க்)
  26. ஜூன் 12, 2024 - வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, (டிரினிடாட்)
  27. ஜூன் 13, 2024 - இங்கிலாந்து vs ஓமன், (ஆன்டிகுவா)
  28. ஜூன் 13, 2024 - வங்காளதேசம் vs நெதர்லாந்து, (செயின்ட் வின்சென்ட்)
  29. ஜூன் 13, 2024 - ஆப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா, (டிரினிடாட்)
  30. ஜூன் 14, 2024 - அமெரிக்கா vs ஐயர்லாந்து, (புளோரிடா)
  31. ஜூன் 14, 2024 - தென்னாப்பிரிக்கா vs நேபால், (செயின்ட் வின்சென்ட்)
  32. ஜூன் 14, 2024 - நியூசிலாந்து vs உகாண்டா, (டிரினிடாட்)
  33. ஜூன் 15, 2024 - இந்தியா vs கனடா, (புளோரிடா)
  34. ஜூன் 15, 2024 - நமீபியா vs இங்கிலாந்து, (ஆன்டிகுவா)
  35. ஜூன் 15, 2024 - ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து, (செயின்ட் லூசியா)
  36. ஜூன் 16, 2024 - பாகிஸ்தான் vs ஐயர்லாந்து, (புளோரிடா)
  37. ஜூன் 16, 2024 - பங்களாதேஷ் vs நேபால், (செயின்ட் வின்சென்ட்)
  38. ஜூன் 16, 2024 - இலங்கை vs நெதர்லாந்து, (செயின்ட் லூசியா)
  39. ஜூன் 17, 2024 - நியூசிலாந்து vs பப்புவா நியூ கினியா, (டிரினிடாட்)
  40. ஜூன் 17, 2024 - வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கானிஸ்தான், (செயின்ட் லூசியா)
  41. ஜூன் 19, 2024 - A2 vs D1, (ஆன்டிகுவா)
  42. ஜூன் 19, 2024 - B1 vs C2, (செயின்ட் லூசியா)
  43. ஜூன் 20, 2024 - C1 vs A1, (பார்படாஸ்)
  44. ஜூன் 20, 2024 - B2 vs D2, (ஆன்டிகுவா)
  45. ஜூன் 21, 2024 - B1 vs D1, (செயின்ட் லூசியா)
  46. ஜூன் 21, 2024 - A2 vs C2, (பார்படாஸ்)
  47. ஜூன் 22, 2024 - A1 vs D2, (ஆன்டிகுவா)
  48. ஜூன் 22, 2024 - C1 vs B2, (செயின்ட் வின்சென்ட்)
  49. ஜூன் 23, 2024 - A2 vs B1, (பார்படாஸ்)
  50. ஜூன் 23, 2024 - C2 vs D1, (ஆன்டிகுவா)
  51. ஜூன் 24, 2024- B2 vs A1, (செயின்ட் லூசியா)
  52. ஜூன் 24, 2024- C1 vs D2, செயின்ட் வின்சென்ட்
  53. ஜூன் 26, 2024 - அரையிறுதி போட்டி 1, (கயானா)
  54. ஜூன் 27, 2024- அரையிறுதி போட்டி 2, (டிரினிடாட்)
  55. ஜூன் 29, 2024 - இறுதி போட்டி, (பார்படாஸ்)
Tags :
Advertisement