T20 உலகக் கோப்பை 2024!. கோலி, பும்ரா ஆகியோரின் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?. முழு பட்டியல்!
T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை தொடர் ஆட்டநாயகனாக ஜஸ்பிரித் பும்ரா வென்றதால் விராட் கோலி இறுதி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பார்படாஸில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டி20 உலகக் கோப்பை தொடர் அறிமுகமான 2007ம் ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வந்த நிலையில் நேற்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இருப்பினும், இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ள இந்த நிலையில், நட்சத்திர ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். ஜெய்ஷாவின் இந்த பரிசுத்தொகை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. டி20 உலக கோப்பை நடத்தும் ஐசிசியே இந்த தொடருக்கு பரிசுத்தொகை என 91 கோடி ரூபாயை தான் அறிவித்து இருக்கிறது. ஆனால் அதைவிட பல மடங்கு அதிக தொகையை இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற போது பிசிசிஐ 3 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியது.
அதன்படி, ஒவ்வொரு வீரர்களுக்கும் எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விவரங்களையும் பார்க்கலாம். இந்த வெற்றிக்கு மிகமுக்கியக் காரணமாக விளங்கியிருக்கிறார் வேகப்பந்து சூப்பர் ஸ்டார் ஜஸ்ப்ரித் பும்ரா. ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி இந்த தொடரின் நாயகனாகவும் அங்கீகாரம் பெற்றிருக்கிறார் பும்ரா. இந்த உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் பும்ரா.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: ரன்களை எடுத்த பேட்டர் அடிப்படையில், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 இன்னிங்ஸ்களில் 281 ரன்களும், இந்தியாவின் ரோஹித் சர்மா 8 போட்டிகளில் 257 ரன்களும் எடுத்தனர். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 17 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை எடுத்தனர்.
2024 டி20 உலகக் கோப்பையை வென்றதற்காக இந்தியாவுக்கு சுமார் 2.45 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றது. பரிசுத் தொகையாக ரூ.19.95 கோடி கிடைத்துள்ளது. T20 உலகக் கோப்பை 2024 இரண்டாம் இடத்தைப் பிடித்ததற்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுமார் 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றது, அதாவது தோராயமாக. 2024 டி20 உலகக் கோப்பையின் இரண்டாம் இடத்தைப் பிடித்ததற்காக ரூ.10.64 கோடி.
இறுதிப் போட்டியில் சிறந்த கேட்ச் பிடித்த சூரிய குமாருக்கு இந்திய மதிப்பில் 2.5 லட்சம் ரூபாயும், இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலிக்கு 4 லட்ச ரூபாயும், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற பும்ராவுக்கு இந்திய மதிப்பில் 12 லட்சம் ரூபாய்க்கு மேலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Readmore: நோட்!. இன்றுமுதல் அமலாகும் புதிய விதிகள்!. சிலிண்டர் முதல் ஐடிஆர் வரை!. முழுவிவரம்!