For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி திரையரங்குகளில் டி20 கிரிக்கெட் போட்டி!… PVR Inox புதிய திட்டம்!

06:53 AM May 17, 2024 IST | Kokila
இனி திரையரங்குகளில் டி20 கிரிக்கெட் போட்டி … pvr inox புதிய திட்டம்
Advertisement

PVR Inox : ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளை நேரலையாக திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய இந்தியாவின் மிகப்பெரிய சினிமா ஆபரேட்டரான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம், 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில், ரூ.130 கோடி இழப்பு சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நஷ்டம் முந்தைய ஆண்டில் ரூ.333 கோடியாக இருந்தது. அதுவே 2023-24ம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டில் ரூ.13 கோடி லாபம் ஈட்டி இருந்தது.

இந்தநிலையில், இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளை நேரலையாக திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரு வாரத்தில் டி20 உலககோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெற உள்ளது, மேலும் அதற்கான ஏற்பாடுகளும் தீவீரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நிதின் சூட் பேசியதாவது, இந்த 2024 காலாண்டில் மட்டும் எங்களுக்கு கிட்ட தட்ட ரூ.130 கோடி ($15.6 மில்லியன்) திரைப்படங்களால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மேலும், இதை சரி கட்ட நாங்கள் கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், விளையாட்டுகள் என்று மாற்று நிகழ்வுகளால் எங்களது போர்ட்ஃபோலியோவை உருவாக்கி வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் 50 ஓவர் போட்டிகளை விட 20 ஓவர் போட்டிகளுக்கு ஈர்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மைதானத்தில் காணும் சூழலை திரையரங்கியிலும் காண முடியும் எனவும் ஒரு ஊடகமாக மக்களுக்குள் தொடர்புடையதாக இருப்பதே எங்களது மிகப்பெரிய கவனம் என்று கூறியுள்ளார்.

Readmore: 1 ரூபாய் கூட சேமிக்க முடியவில்லையா? டென்ஷன் வேண்டாம்!! இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க!!

Advertisement