பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்.! இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து மருத்துவரின் விளக்கம்.!?
பொதுவாக பெண்ணாக பிறந்த அனைவருக்குமே மாதவிடாய் வரும் என்பது சாதாரணமான விஷயமே. ஆனால் 40 வயதிற்கு பிறகு இந்த மாதவிடாய் முற்றிலுமாக நின்று விடும். இதையே மெனோபாஸ் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பெண்களின் கர்ப்பப்பை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கருமுட்டையை வெளியிடுவதை நிறுத்துகிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் புரொஜெஸ்டன் என்ற ஹார்மோன் சுரப்பும் குறைய தொடங்குவதால் உடல் அளவிலும், மனதளவிலும் பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றது.
பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் உடல் எப்போதும் அதிக சூடாகவே இருக்கும். சுற்றுச்சூழல் குளிராக இருந்தாலும், இத்தகைய பெண்களின் உடல்களில் மட்டும் அதிகமாக வேர்த்து கொட்டும். திடீரென படபடப்பு, மன பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ப்ரொஜெஸ்ட்ரான் என்ற ஹார்மோன் குறைபாட்டினால் மனக்குழப்பம், கோபம், அழுகை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
குறிப்பாக இந்த மெனோபாஸ் நேரத்தில் பல பெண்களும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பெண்களுக்கு அதிகாலை தூக்கம் பாதிக்கும். ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும். பொதுவாக இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பதனால் உடலில் நோய்கள் தாக்குகின்றன.
இவ்வாறு மெனோபாஸிற்கு பிறகு தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்வது, தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது, பகல் நேரத்தில் தூங்காமல் இருப்பது, தூக்கத்தை கெடுக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பது போன்ற செயல்முறைகளின் மூலம் மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் தூக்கமின்மையின் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.