For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறுநீரில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா.? காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை பாருங்கள்.!?

06:03 AM Jan 13, 2024 IST | 1newsnationuser5
சிறுநீரில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா   காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை பாருங்கள்
Advertisement

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும், தவறான பழக்கவழக்கமும் உடலில் சத்து குறைபாடை ஏற்படுத்தி பல்வேறு நோய்கள் உருவாக்குகிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் பலரையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சர்க்கரை நோய் பாதித்தால் முறையான மருத்துவ சிகிச்சையும், உணவு கட்டுப்பாடுகளும் பின்பற்றி வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும் போது உடலில் மற்ற உறுப்புகளை சேதப்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்:

1. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சிறுநீரகத்தை பாதித்து, புரதச்சத்தை உடலில் அதிகப்படுத்துகிறது. இதனால் சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் மாற்றம் அடையும்.
2. சிறுநீர் கழிக்கும் நேரத்தில் நுரை அதிகமாக வந்தால் ரத்தத்தில் புரதச்சத்து அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
3. சிறுநீர் கழிக்கும் போது அளவுக்கு அதிகமான துர்நாற்றம் வீசினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று அர்த்தம் ஆகும்.
இது போன்ற அறிகுறிகளின் மூலம் சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து நோய்க்கான மருந்தை எடுத்துக்கொண்டு,  உணவு கட்டுப்பாடுடன் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

Tags :
Advertisement