முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடர்ந்து 46 மணி நேரம் ஓடி ஹைட்ரஜன் ரயில் கின்னஸ் ரிக்கார்ட்!

09:05 PM Mar 30, 2024 IST | Baskar
Advertisement

உலகளவில் ரயில்களில் பயணம் செய்வதில் தான் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரயில்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் எல்லா இடங்களில் ஒரே மாதியான ரயில்கள் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக ஃபுனிகுலர்கள் மற்றும் ரேக் ரயில்கள் செங்குத்தான சரிவுகளில் பயணிக்க தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்தநிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரெயில் 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 2,803 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது. தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் ஸ்டாட்லர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதேபோல், சீனாவும் முதல் உள்நாட்டு ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் 160 கிமீ வேகத்தில் இயக்கி முழு ஓட்ட சோதனையை நிறைவு செய்தது. வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுனில் உள்ள CRRC Changchun Railway Vehicles Co Ltd நிறுவனத்தால் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article