"இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்..!!" சுவிட்சர்லாந்த் பயணியின் இன்ஸ்டா பதிவு..!! காரணம் இதுதான்..
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண், தாஜ்மஹாலுக்கு முன்னால் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முழு வீடியோ வெளியானது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நவ் ஆரியா என்ற பெண் உலகம் முழுவதும் பயணம் செய்து வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது, சிவப்பு லெஹங்கா அணிந்து தாஜ்மஹாலுக்கு முன்பு அவர் நடனமாடுவது போன்ற வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தாஜ்மஹாலுக்கு முன்பு சிவப்பு லெஹங்கா அணிந்து நடனமாடுவது போன்ற அவரது வீடியோ இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான வியூஸ் பெற்றுள்ளது.
Don't travel to India என்ற தலைப்பை இந்த வீடியோவில் அவர் பதிவிட்டதால் இந்திய ரசிகர்கள் ஷாக் ஆகினர். ஆனால் அந்த வீடியோவின் தலைப்பு எதிர்மறையாகத் தோன்றியபோதிலும் முழுமையான பதிவின் தலைப்பு "ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் வாழ்நாளுக்கான சாகசத்திற்கு நீங்கள் தயாராக இல்லாவிட்டால் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்" என்று உள்ளது.
ஜூன் மாதம் இந்தியாவுக்கு பயணம் செய்த ஆரியா, ஜெய்ப்பூர், ஆக்ரா (தாஜ்மஹால்), டெல்லி (குதுப் மினார்) போன்ற முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தார். அவர் ஜெய்ப்பூரின் சுவையான உணவை ருசித்ததோடு, ராஜஸ்தானி நாட்டுப்புற நடனத்தையும் ரசித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, அதன் பன்முகத்தன்மையை உலகிற்கு காட்டியுள்ளார்.
வைரல் வீடியோவின் தலைப்பு எதிர்மறையாக இருந்தாலும், முழுமையான பதிவு இந்தியாவின் மீதான அவரது காதலை வெளிப்படுத்துகிறது. வீடியோவின் தலைப்பை பார்த்த அவசரமாக திட்டி கமெண்ட் செய்த பலரும் முழுமையாக வீடியோவை பார்த்த பிறகு அவசரப்பட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டு பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப்போனால், நவ் ஆரியாவின் இந்திய பயணம், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அழகை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவரது வீடியோக்கள், பலரின் பயணத் திட்டங்களை மாற்றி, இந்தியாவை அவரது பாலோவர்கள் மத்தியில், ஒரு பிரபலமான பயண இடமாக மாற்றியுள்ளது.
Read more ; இரயிலில் இப்படியும் நடக்குமா? டாய்லெட்டுக்குள் இழுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!!