ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் ஸ்விக்கி நிறுவனம்..!! எத்தனை பேர் தெரியுமா..?
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்று ஸ்விக்கி. இந்நிறுவனம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பணிநீக்கங்களால் ஸ்விக்கி நிறுவனத்தின், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் குழுக்கள் பாதிக்கப்படலாம்.
இதற்கு முன் 2023 ஜனவரியில் 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. செலவைக் குறைப்பதற்காக இந்த பணிநீக்கம் செயல்படுத்தப்படுவதாக இந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஸ்விக்கி தனது ஐபிஓ செயல்முறைகளுக்காக கோடக் மஹிந்திரா கேபிடல், சிட்டி மற்றும் ஜேபி மோர்கன், போஃபா செக்யூரிட்டீஸ், ஜெஃப்ரிஸ் என 7 முதலீட்டு வங்கிகளை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய உணவு விநியோக சந்தையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை சொமாட்டோ கொண்டுள்ளதாக அலையன்ஸ் பெர்ன்ஸ்டீன் சமீபத்தில் தெரிவித்துள்ளது.ஸ்