For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக வெற்றி கழகம்; "ஆரம்பமே சரியில்லையே.."! "கட்சி பெயரில் 'க்' இருக்கா.?.." விஜய் கட்சியை கலாய்த்த எஸ்.வி சேகர்.!

06:14 PM Feb 02, 2024 IST | 1newsnationuser4
தமிழக வெற்றி கழகம்   ஆரம்பமே சரியில்லையே      கட்சி பெயரில்  க்  இருக்கா      விஜய் கட்சியை கலாய்த்த எஸ் வி சேகர்
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் இன்று அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் புதிதாக தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டது. கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அவர் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது பற்றி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான எஸ்.வி சேகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் வாழ்த்துக்களோடு சேர்த்து பெயரில் இருக்கும் எழுத்து பிழையையும் சுற்றி காட்டி உள்ளார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பற்றி ட்விட்டரில் பதிவு செய்த எஸ்வி சேகர் " நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள். அடையாளம் தெரிந்த எதிரிகளை விட அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த எதிரிகளே ஆபத்தானவர்கள். எந்த முடிவாக இருந்தாலும் உங்களது முடிவாக இருக்கட்டும் அதை நீங்களே அறிவீர்கள் என பதிவு செய்துவிட்டு தமிழக வெற்றி(க்) கழகம் 'க்' வருமா.? என்ற கேள்வியுடன் கிண்டலாக பதிவு செய்து இருக்கிறார்.

Tags :
Advertisement