For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அசர வைக்கும் விஜய் டிவி பிரியங்காவின் சொத்து மதிப்பு..!! ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை லட்சம் வாங்குகிறாரா..?

The property value of Vijay TV's popular anchor Priyanka has been revealed.
02:05 PM Sep 17, 2024 IST | Chella
அசர வைக்கும் விஜய் டிவி பிரியங்காவின் சொத்து மதிப்பு     ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை லட்சம் வாங்குகிறாரா
Advertisement

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருக்கும் இவர், தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாக ரசிகர்களை மகிழ வைத்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி, பைனல் ரவுண்டுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே தான், தனது ஆங்கரிங் பணியில் குக் வித் கோமாளியில் பங்குபெற்றுள்ள தொகுப்பாளினியின் தலையீடு அதிகம் இருப்பதாக கூறி மணிமேகலை விஜய் டிவியை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணமே பிரியங்கா தேஷ்பாண்டே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அவரின் சொத்து மதிப்பு சுமர் ரூ.10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர், ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, யூடியூப் சேனலில் 1.50 மில்லியன் Subscribers வைத்திருக்கும் பிரியங்கா, அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். மேலும், சென்னையில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்றும் உள்ளது.

Read More : ’வேலை வேலை என்று ஓடாதீர்கள்’..!! ’உணவு இடைவெளியின்போது உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள்’..!! ரஷ்யா அதிரடி..!!

Tags :
Advertisement