For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடர் மழையால் உபரிநீர் திறப்பு..!! 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

06:58 AM Nov 12, 2023 IST | 1newsnationuser6
தொடர் மழையால் உபரிநீர் திறப்பு     5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement

வடகிழக்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, பாம்பனாறு உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து, கடந்த 8ஆம் தேதி 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்திற்காக விநாடிக்கு 900 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் நீர்மட்டம் 70.51அடியாக (மொத்த உயரம் 71அடி) உயர்ந்தது. நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 319 அடியாக இருந்தது. நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கியதால் அணைக்கு வரும் 1,319 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. இதில் 700 கனஅடி நீர் பாசன வாய்க்கால் வழியாகவும், 619 கனஅடிநீர் ஆற்றின் வழியாகவும் வெளியேற்றப்பட்டது.

வரும் நீர் முழுவதையும் தொடர்ந்து வெளியேற்ற நீர்பாசனத் துறையினர் முடிவு செய்திருக்கின்றனர். ஆகவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
Advertisement