"“நடிகர் சூர்யாவுக்கு செய்வினை வச்சுருக்காங்க" பயில்வான் ரங்கநாதன் அளித்த பரபரப்பு பேட்டி...
தொடர்ச்சியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. சினிமா வட்டாரத்தில் யாருக்கு என்ன நடந்தாலும் முதல் நபராக வந்து கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், இதற்கும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, கடந்த 3 ஆண்டுகளில் சூர்யா நடிப்பில் வெளியான எந்தப் படமும் ஓடவில்லை. இதனால் சூர்யாவிற்கு ஏழரை சனி தொடங்கியது நன்கு தெரிகிறது. ஒரு சிலர் சேர்ந்து சூர்யாவிற்கு செய்வினை வைத்துவிட்டார்கள்.
இதனால் சூர்யாவும் ஜோதிகாவும் சண்டியாகம் செய்ய உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுவாக மூகாம்பிகை கோவிலுக்கு, செல்வத்தை இழந்தவர்கள் மீண்டும் செல்வதை மீட்டெடுக்க செல்வார்கள். மக்களின் செல்வாக்கை பெற்ற சூரியா மீண்டும் மீட்க வேண்டும் என்பதற்காக அங்கு வழிபாடு நடத்தினர். மேலும், மூகாம்பிகை கோயிலுக்கு எம்ஜிஆர் தங்கவாள் கொடுத்து வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி கோயிலில், இந்து அல்லாதவர்கள் வழிபட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பிறப்பால் இஸ்லாமியரான ஜோதிகா தனியே சென்று வழிபாடு செய்தார். தற்போது அவர்களை பிடித்திருந்த ஏழரை சனி விலக வேண்டும் என்று அவர்கள் சண்டியாகம் செய்ய உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Read more: ரசிகர்களே ரெடியா?? புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..