'மெய் சிலிர்க்க வைக்கும் சூரசம்ஹாரம்' முருகப்பெருமான் சூரபத்மனை எப்படி வதம் செய்தார்.. இந்த கதை தெரியுமா?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டது என்று கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் என்றால் அது திருச்செந்தூர் தான். மற்ற கோயில்கள் எல்லாமே மலைக்கோயில்களாகவே இருக்கும்.
திருச்செந்தூரை பொறுத்தவரை எல்லா நாட்களிலும் முருகனை தரிசிக்க பக்தர்கள் வருவார்கள். எனினும் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி , தை பூசம் போன்ற விழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதில் கந்தசஷ்டி விழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள். ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழா என்பது உலக புகழ்பெற்ற விழாவாக இருந்து வருகிறது. மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி விழாவின் இறுதியாக ஆறாம் நாளன்று பிரசித்து பெற்ற நிகழ்ச்சி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வானது நடைபெற்றது. சூரசம்ஹாரத்தின் வரலாறு என்ன? அதன் முக்கியத்துவம் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சூரசம்ஹாரம் எப்படி நடந்தது ? சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து சிவபெருமானிடம் பல வரங்களை பெற்றான். குறிப்பாக தன்னை எவரும் வெல்லக்கூடாது ஆணுக்கும் பெண்ணுக்கு பிறந்த குழந்தையால் தனக்கு மரணம் நேரக்கூடாது ஆகியவை அடங்கும். இதனால் ஆணவம் கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினான் சூரபத்மன்.
இதை பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலை கேட்ட ஈசன், தனது 5 முகம் மற்று அதோ முகம் என்ற ஆறுமுகத்துடன் தோன்றி தனது நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் மூலம் 6 குழந்தைகள் உருவாக்கினார். அந்த குழந்தைகளை பார்த்து மகிழ்ந்த பார்வதி தேவி, தனது திருக்கரங்களால் ஒரு சேர தழுவி ஒரு குழந்தையாக்கினார். அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்ததால் அழகன் முருகன் என்றும், ஆறு முகத்துடன் இருந்ததால் ஆறுமுகம் என்றும், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயென் என்றும் அழைக்கப்பட்டார்.
முதலில் சூரபத்மனிடம் பேசிப்பார்ப்போம் என்று முருகன் வீரபாகுவை தூது அனுப்பினார். இதுதான் சூர சம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும். முதலில் சூரபத்மனிடம் பேசிப்பார்ப்போம் என்று முருகன் வீரபாகுவை தூது அனுப்பினார். இதுதான் சூர சம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும். வீரபாகுவின் தூதை ஏற்காத சூரபத்மன் அவரை சிறைபிடிக்க முயன்றான். ஆனால் வீரபாகு சூரனை எதிர்த்து போர் நடத்தினார். 2-வது நாள் சூரனின் மகன் வச்சிரவாகுவையும், 3-வது நாள் அசுரர் கூட்டத்தின் தலைவனான சகத்திரவாகுவையும் கொன்றார். பின்னர் முருகனை சந்தித்து நடந்ததை கூறினார் வீரபாகு.
இதையடுத்து 4-வது நாள் முருகனே களமிறங்கினார். முருகனுக்கு சூரபத்மனுக்கும் திருச்செந்தூரில் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. சூரபத்மன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரங்களை பெற்றிருந்தான். மேலும் முருக பெருமான் முன் தோன்றி சரமாரியாக அம்புகளை தொடுத்தான். ஆனால் அவை யாவும் முருகனின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. பல மாயாஜாலங்கள் செய்த சூரன் பல உருவங்களாக மாறி போர் செய்தான்.
சிவபெருமானால் வழங்கப்பெற்ற இந்திரஞாலம் என்ற தேரை அழைத்த சூரபத்மன், முருகனின் படை சேனைகளை அழைத்து பிரபஞ்சத்தில் உச்சியில் வைக்கும்படி கட்டளையிட்டான். அவன் கூறியவாறே இந்திரஞாலம் தேரும் முருகனின் படையை தூக்கி பிரபஞ்சத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. முருகன் தனது வேல் மூலம், அந்த தேரை தடுத்தி நிறுத்தி தன்வசப்படுத்டினார். இதனால் திகைத்துப்போன சூரன், சிவபெருமானால் தனக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான். ஆனால் முருகனின் வேல் சூலப்படையை மழுங்க செய்தது. இதனால் அதிர்ந்த சூரபத்மன் தனது அம்புப்படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப்பொடியாக்கி செயலிழக்க செய்தது.
தனது படைகளை இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒளிந்து பதுங்கினான். ஆணவம் அழிந்த சூரன் தன் தவறை உணர்ந்து தன்னை மன்னிக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டினான். xழ்அவன் மேல் இரக்கம் கொண்ட முருகன், பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும், சேவலை கொடியிலும் தன்னுடன் இணைத்து கொண்டார். வெற்றி வீர திருமகனாய் முருகப்பெருமான திருச்செந்தூர் திரும்பினார். சூரனுடன் போர் புரிந்த முருகப்பெருமான் அவனின் ஆணவத்தை அடக்கி ஆட்கொண்ட நாளே சஷ்டி நாளாகும்.
Read more ; தமிழகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள்… உடனே நிரப்ப வேண்டும்…!