For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அறுபடை வீடுகளில் இந்த கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது.. ஏன் தெரியுமா?

Surasamharam is not held only in this temple among Arupada houses.. Do you know why?
06:00 AM Jan 08, 2025 IST | Mari Thangam
அறுபடை வீடுகளில் இந்த கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது   ஏன் தெரியுமா
Advertisement

கந்த சஷ்டி வழிபாடும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகள் மற்றும் பெரும்பாலான முருகத் தலங்களில் மிகவும் கோலாகலமாகக் கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால், முருகப்பெருமானின் ஒரே ஒரு படை வீட்டில் மட்டும் இந்த கந்த சஷ்டி நிகழ்வு நடைபெறுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அது  முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணிகைதான்.

Advertisement

சூரர்களை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் சினம்  தணிந்து வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய திருத்தலம்தான் திருத்தணி. தேவர்களையும் முனிவர்களையும் சூரபத்மன் என்னும் அசுரன் மிகவும் கொடுமைப்படுத்தினான். ஈசனிடம் பல அற்புத வரங்களை பெற்றதால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை ஈசன் தன் நெற்றிக்கண் சுடர் மூலம் முருகனை அவதரிக்க செய்து சூரபத்மனின் அழிவிற்கு வித்திட்டார்.

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமானின் சீற்றம் முழுவதும் தணிந்த பின் அமர்ந்த மலையே திருத்தணி என்று புராணங்கள் கூறுகிறது. ஆகையால் மற்ற கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றாலும் இங்கு முருகனின் சீற்றத்தை தணிக்க புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம். சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோவில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது.

தேவர்களின் துயர் துடைத்ததோடு அடியவர்களின் கவலையையும், துன்பத்தையும் தணிக்கும் தலம் இது என்பதால் திருத்தணி என்று பெயர் பெயர்பெற்றதாக கூறப்படுகிறது. திருத்தணி மலை நோக்கி சென்றாலோ, திருத்தணி முருகனை நினைத்தாலோ, திருத்தணி மலை இருக்கும் திசை நோக்கி வாங்கினாலோ முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் தணிகை புராணம்.

Read more ; “விஜயகாந்த் நடிக்கும் படத்தில், நான் நடிக்க மாட்டேன்” பிரபல ஹீரோ சொன்ன காரணம்..

Tags :
Advertisement