பிரபல ஷெஃப் குணால் கபூரின் விவாகரத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!!
பிரபல சமையல் கலைஞரான குணால் கபூருக்கு விவாகரத்து வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது .
வட இந்தியாவில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் குணால் கபூர். இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இவர், முன்னதாக தனது மனைவி டார்ச்சர் தாங்க முடியவில்லை எனச் சொல்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்துக் கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
மனைவி மீதான தன்னுடைய புகாரில், தனது பெற்றோரையும் தன்னையும் அவமானப்படுத்தும் படியாக மனைவி நடந்து கொள்கிறார் எனக் கூறியிருந்தார். இதற்கு பதில் வாதமாக, குணால் கபூரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் ஆனால், அவருடன் தான் சேர்ந்து வாழவே விரும்புதாகவும் அவரது மனைவி தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த் டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் குணால் கபூருக்கு ஆதரவாக விவாகரத்து கொடுத்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி மேல் முறையீடு செய்தார். கபூரின் மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் விசாரித்தனர், அவர்கள் தம்பதியினருக்கு இடையே சாத்தியமான தீர்வு குறித்து ஆராய உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்திற்கு வழக்கை பரிந்துரைத்தனர். இந்நிலையில், பிரபல சமையல் கலைஞரான குணால் கபூருக்கு விவாகரத்து வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Read more ; டெலிகிராம் CEO டிஎன்ஏ-வில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள்..!! அவரே சொன்ன விஷயம்!!