Gyanvapi Masjid | இந்துக்களின் பூஜைக்கு தடை விதிக்க முடியாது.!! ஞானவாபி மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி.!!
Gyanvapi Masjid: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்துவதை தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இருப்பினும், மசூதி வளாகத்திற்குள் இந்துக்கள் மத அனுஷ்டானங்களை நடத்துவது குறித்து தற்போதைய நிலை தொடரும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனவரி 17 மற்றும் ஜனவரி 31 தேதியிட்ட உத்தரவுகளுக்குப் பிறகு முஸ்லீம் சமூகம் தடையின்றி நமாஸ் செய்வதையும் இந்துக்கள் தெஹ்கானா பகுதியில் பூஜை செய்வதையும் மனதில் கொண்டு தற்போது இருக்கும் நிலை தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இரண்டு சமூகங்களும் மேற்கண்ட விதிமுறைகளில் வழிபாடுகளை வழங்க வேண்டும்," என்று சட்ட இணையதளமான லைவ் லா பெஞ்ச் தெரிவித்துள்ளது.
Gyanvapi மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்து பூஜைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து ஞானவாபி மசூதி கமிட்டியின் மனுவை ஜூலை மாதம் இறுதி தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.