பரபரப்பு...! ஆளுநர் விவகாரம்...! தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை...!
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாகக் கூறி தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பினார். சனிக்கிழமை கூடிய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் 10 மசோதாக்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை நாடியது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான முறையில் செயல்பட்டு, மாநில அரசின் செயல்பாடுகளை ஆளுநர்கள் தடுப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.