அது என்ன யா யா.. இது ஒன்னும் காபி ஷாப் இல்ல.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது..!! - கடுப்பான உச்ச நீதிமன்ற நீதிபதி
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதியிடம், 'யா...யா...' என கூறிய வழக்கறிஞரை ' இது ஒன்றும் காபி ஷாப் இல்லை, ஆம் என்று சொல்லிப்பழகுங்கள்' என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவுறுத்தினார்.
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உள்நாட்டில் விசாரணை நடத்தக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. பொது நல மனுவில் 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை குறிப்பிட்டு, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை பதில் மனு தாரராக அவர் சேர்த்து இருந்தார். இதைப் பார்த்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், "இது சட்டப்பிரிவு 32 தொடர்பான வழக்கு.. இதை எப்படி நீதிபதியை பதில் மனுதாரராக சேர்த்து பொது நல மனுவாக தாக்கல் செய்ய முடியும்? என்று கேட்டார்.
தலைமை நீதிபதி கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர்.. யா யா.. அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இதைத்தான் கூறினார். என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே.. குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அது என்ன யா யா.. இது ஒன்றும் காஃபி ஷாப் இல்லை.. இந்தவார்த்தையே எனக்கு பிடிக்காதது. இங்கே இதை அனுமதிக்க முடியாது எனக் கண்டித்தார்.
தொடர்ந்து வழக்கை விசாரித்த அவர், நீதிபதியை எதிர்மனுதாரராக வைத்து நீங்கள் எப்படி பொதுநல மனு தாக்கல் செய்யலாம்? சில கண்ணியம் இருக்க வேண்டும். நீதிபதிக்கு எதிராக உள் விசாரணை வேண்டும் என்று நீங்கள் கூற முடியாது. நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு கூறியது. மேலும், நீதிபதி கோகாய் பெயரை தனது மனுவில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மனுதாரரை அறிவுறுத்தினார்.
Read more ; மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!!