முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உச்ச நீதிமன்ற வழக்குகள் இனி வாட்ஸ் அப் மூலம் அறிந்துகொள்ளலாம்... புதிய வசதியை அறிவித்தார் தலைமை நீதிபதி!

04:45 PM Apr 25, 2024 IST | Mari Thangam
Advertisement

தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வழிகாட்டுதலின் கீழ், நீதித்துறை செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை உச்ச நீதிமன்றம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வழக்குப் பட்டியல்கள், காரணப் பட்டியல் மற்றும் வழக்குப் பதிவுகள் தொடர்பான தகவல்களை உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப் மூலம் அனுப்பவுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வாட்ஸ் அப் என்பது நமது அன்றாட வாழ்வில் எங்கும் நிறைந்த ஒரு சேவையாக இருந்து வருகிறது, மேலும் இது ஒரு சக்திவாய்ந்த தகவல் தொடர்பு கருவியாக உள்ளது. நீதியை அணுகுவதற்கான உரிமையை வலுப்படுத்தவும், நீதித்துறை அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், உச்ச நீதிமன்றம் அதன் தகவல் தொழில்நுட்ப சேவைகளுடன் வாட்ஸ்அப் சேவைகளை ஒருங்கிணைக்கவுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் அதன் 75 வது ஆண்டில் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.

மேலும், “இந்த வசதியும் சேவையும் நமது அன்றாட வேலைப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவரும். இது காகிதத்தையும் நமது பூமியையும் சேமிப்பதில் நீண்ட தூரம் செல்லும்” என்று அவர் தெரிவித்தார். வாட்ஸ் அப் சேவை அறிமுகமான பின்னர், வழக்குத் தாக்கல் தொடர்பான தானியங்கி செய்திகளை வழக்கறிஞர்கள் பெறுவார்கள்.

மேலும், பார் உறுப்பினர்கள் அவர்களின் மொபைல் போன்களில் காரணப் பட்டியலையும் பெறுவார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு திட்டமிடப்பட்ட வழக்குகள் என்னவென்று காரணப் பட்டியல் மூலம் தெரிவிக்கப்படும். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன், மனுக்களில் இருந்து எழும் சிக்கலான சட்டக் கேள்வி மீதான விசாரணையைத் தொடங்கும் முன், தலைமை நீதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் இதுகுறித்து தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ““இது மற்றொரு புரட்சிகரமான நடவடிக்கை. இந்திய தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளார். இந்த எண்ணில் எந்த செய்திகளும் அழைப்புகளும் ஏற்கப்படாது என்று தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்” என்று கூறினார். இ-கோர்ட் திட்டத்திற்கு அரசு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Dhananjaya Yeshwant Chandrachudsuprime court
Advertisement
Next Article