சட்டவிரோத சிவன் கோயிலை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!!
யமுனை வெள்ளப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலை இடிக்க அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கும் போது உயர்நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை என கூறியது.
நீதிமன்ற விசாரணையின் போது, நீதிபதிகள் பழமையான கோவிலின் ஆதாரம் எங்கே? என மனுதாரரிடிடம் கேள்வி எழுப்பியது. மேலும், பழமையான கோவில்கள் சிமெண்டால் கட்டப்படவில்லை என்றும், பாறையால் கட்டப்பட்டவை என்றும் கூறிய நீதிமன்றம், அதன் பிறகு கோவிலின் பழமையான நிலையை நிரூபிக்கும் ஆவணங்களை காட்டுமாறு மனுதாரரிடம் கோரினர்.
கோவில் சொத்துக்களின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பான நிர்வாகத்தை பராமரிக்கும் நோக்கத்துடன் மனுதாரர் சங்கம் 2018 -ல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் சங்கம் நிலத்தின் மீதான உரிமை ஆவணத்தை காட்ட தவறி விட்டதாகவும், கோயில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்ததர்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும், கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் பிற வழிபாட்டு பொருட்களை அகற்றி, வேறு ஏதேனும் கோவிலுக்கு மாற்ற 15 நாட்கள் அவகாசம் அளிப்பதாக நீதிமன்றம் கூறியது. அவ்வாறு செய்ய தவறினால், சிலைகள் வேறு ஏதாவது கோவிலில் வைக்கப்படுவதை உறுதி செய்ய டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது. சட்ட ஒழுங்கை பராமரிக்க உள்ளூர் காவல் துறையும், நிர்வாகமும் மேற்கண்ட செயல்பாட்டில் முழு உதவியை வழங்கும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read more ; அமித்ஷா கொடுத்த வார்னிங்! தமிழிசை வீட்டுக்கே சென்று பேசிய அண்ணாமலை! பஞ்சாயத்து ஓவர்..