முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்...! 12 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு...! முழு விவரம்

06:15 AM Jun 04, 2024 IST | Vignesh
Advertisement

12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 1 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், 11-ம் வகுப்பு துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 1 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், 11-ம் வகுப்பு துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24-ம் தேதி மொழித் தேர்வு, 25-ம் தேதி ஆங்கிலத் தேர்வு, 26-ம் தேதி பயோ-கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், புள்ளியியல், பேசிக்ஸ் எலக்ரிக்கல் இஞ்சினியரிங், ஜூன் 27-ம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல், ஜூன் 28-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வுகள் நடக்கவுள்ளது.

மேலும் ஜூன் 29-ம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், பேசிக் சிவில் இஞ்சினியரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ், பேசிக் மெக்கானிக்கல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஜூலை 1-ம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயோலஜி, டெக்ஸ்டைல் மற்றும் ட்ரஸ் டிசைனிங், விவசாய அறிவியல், நர்சிங் ஆகிய தேர்வுகள் நடக்கவுள்ளது.

Tags :
Edu departmentexampublic examtn government
Advertisement
Next Article