நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் திடீர் ஆலோசனை!! என்ன காரணம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் பூச்சி முருகன், கார்த்தி மற்றும் கருணாஸ் இன்று ரஜினியின் வீட்டில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த புதிய கட்டிடம் கட்டும் பணி போதிய பணம் இல்லாமல் அப்படியே நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இந்த கட்டிடம் கட்ட பணம் கொடுத்து உதவிய பல பிரபலங்கள் மீண்டும் பணம் கொடுத்து உதவ முன்வந்தனர்.
அதன்படி, கமல், ரஜினி, சிவகார்த்திகேயன், நெப்போலியன், தனுஷ் உள்ளிட்ட பலர் தங்களுடைய சொந்த வைப்பு நிதியில் இருந்து தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவினர். நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிய கட்டிடத்தின் பணிகள் 80 சதவீதம் வரை, முடிவடித்துவிட்ட நிலையில்.... மீதம் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளதாகவும், அவற்றை முடிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பாக சங்கத்தின் மூத்த உறுப்பினர்களிடம் ஆலோசனை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றனர்.
இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் ஆகியோர் இன்று (ஜூலை 1) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவர்களிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த ரஜினிகாந்த் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு பெற வேண்டுமா? இனி ஆதார் எண் கட்டாயம்!!