முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்ட அமானுஷ்ய சிவன் கோவில்.. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் மர்மம்..!!

Supernatural Shiva temple built overnight by demons.. A mystery that continues for a thousand years
06:00 AM Jan 16, 2025 IST | Mari Thangam
Advertisement

இந்தியாவில் கட்டப்பட்ட ஒவ்வொரு கோயில்களுக்கும் வரலாறு, தனிச்சிறப்பு மற்றும் வித்தியாசமான நம்பிக்கைகள் உள்ளது. உத்திர பிரதேசத்தின் மீருட் மாவட்டத்தில் உள்ள சிம்பெளலி அருகே உள்ள தாதியானா என்ற கிராமத்தில் தான் இந்த பழங்கால, அதிசயிக்க வைக்கும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு தான் இதன் அதிசயமே. இந்த கோவில் மற்ற கோவில்களைப் போல் மனிதர்களாலோ அல்லது ஏதோ ஒரு அமைப்பாலோ கட்டப்பட்டது கிடையாதாம். இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்டதாம். அதுவும் ஒரே இரவில் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. அதனாலேயே இந்த கோவிலை பூதன் வாலா அல்லது சிவப்பு கோவில் என்று அழைக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

Advertisement

இக்கோயில் இரவில் பேய்களால் கட்டி முடிப்பதற்குள் சூரிய உதயம் வந்துவிட்டதால் கோபுரத்தை நிறைவு செய்யாமலேயே அப்படியே சென்று விட்டனராம். பின்பு 1980 ஆம் வருடம் இந்த சிவன் கோயிலில் ஒரு சில விரிசல்கள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கோயிலை சரி செய்துள்ளனர். இந்த கோவிலின் தனித்துவம் என்னவென்றால் இக்கோவில் சிமெண்டால் கட்டப்பட்டது கிடையாது. சிவப்பு நிற கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

மேலும் எவ்வளவு பெரிய இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் இந்த கோயிலுக்கு எதுவும் ஆகாது. இந்தியாவில் பல பகுதிகளில் மழை வெள்ளத்தாலும், பயிர்கள் வாடி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது போன்ற பல பிரச்சனைகள் நடந்தாலும் இந்த கிராம மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செழிப்பாகவே வாழ்ந்து வந்தனர். இந்த கோயிலின் பின்னால் இருக்கும் மர்ம கதைகள் குறித்து அங்கு சுற்றி பார்க்கவரும் மக்களும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இது பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் என உள்ளூர் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தாலும் இது உண்மை என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Read more : கொடூரத்தின் உச்சம்!! 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவர்…

Tags :
shiva temple
Advertisement
Next Article