10 ஆம் வகுப்பு போதும்.. ஊர்க்காவல் படையில் வேலை..!! சொந்த ஊரிலே பணி.. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
ஊர்க்காவல் படை என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பாதுகாப்பிற்காக இளைஞர்களை கொண்ட குழுவாக அமைக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உள்ள செய்தி குறிப்பின்படி,
ஊர்க்காவல் படை காலியிடங்களின் எண்ணிக்கை : 19
தகுதிகள்:
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஊர்க்காவல் படையில் சேர விரும்புபவர் ஒருவேளை அரசு ஊழியராக இருப்பின் அவர் அந்த துறையை சேர்ந்த அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
- எவ்வித குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. அதோடு எந்த விதமான சாதி, மத, அரசியல் மற்றும் எவ்வித சங்கங்களிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை கடலூர் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணிக்குள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து (10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல் அவசியம்) கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.09.2024 மாலை 5 மணி
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணி அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும் (நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம்) ஊதியம் மாதம் ரூ.2800 வழங்கப்படும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Read more ; பிரிஜ் பூஷன் சர்ச்சை பேச்சு.. பதிலடி கொடுத்த வினேஷ் போகத்..!! என்ன சொன்னார் தெரியுமா?